இந்த பதிவில் SSD மற்றும் Hard disk பற்றி விரிவாக பார்க்க போகிறோம். முதலில் ஹார்ட் டிஸ்க் என்றால் என்ன என்று பார்ப்போம். ஹார்ட் டிஸ்க் என்பது தமிழில் வன்வட்டு அல்லது வன்தட்டு என்றும், ஆங்கிலத்தில் சுருக்கமாக HDD என்றும் அழைக்கப்படும். இது கணினிகளில், இயக்குதள மென்பொருள், பயன்பாட்டு மென்பொருள், தரவுகள் மற்றும் தகவல்கள் சேமித்து வைக்க பயன்படும். கணினியை இயக்கும் மின்னாற்றலை நீக்கினாலும், இதில் உள்ள தரவுகள் அழிந்து போகாமல் சேமித்து வைத்திருப்பதால் இதனை அழியா நினைவகம் என்றும், நிலையான நினைவகம் என்றும் கூறுவர். இது தரவை நிரந்தரமாக சேமிக்க பயன்படுத்தப்படும். ஹார்ட் டிஸ்க் அதிக வேகத்தில் சுழலும் காந்த வட்டுகள் அல்லது காந்த தட்டுகளைக் கொண்ட, இரண்டாம் நிலை சேமிப்பக சாதனமாகும். சந்தையில் வெளிப்புற வன் வட்டு மற்றும் உள் வன் வட்டு என, இரண்டு வகையான வன் வட்டுக்கள் கிடைக்கின்றது. உள்ளக வன்வட்டு கணனியின் உள்ளேயும். வெளிப்புற வன்வட்டு கையில் எடுத்து செல்லக்கூடியவாறும் இருக்கும். இது பல்வேறு கொள்ளளவுகளில் சந்தையில் கிடைக்கும்.
SSD இனால் அதிவேகமாக read and write செய்ய முடிவதால், உங்களுடைய கணினி வேகமாக செயல்படும். SSD editing மற்றும் Gaming இக்கு மிகவும் நல்லது. ஆனால் இதன் விலை ஹார்ட் டிஸ்க்கை விட அதிகம். உங்களுக்கு வேகம் வேண்டுமானால் SSD யை பயன்படுத்துங்கள். அதிக storage வேண்டுமானால் HHD ஐ தெரிவுசெய்யலாம். ஆனால் இரண்டையுமே பயன்படுத்துவது உங்களுக்கு வேகம் மற்றும் அதிக storage ஐ கொடுக்கும். ஆகவே இனிமேல் நீங்கள் கணனி வாங்கும் போது SSD மற்றும் HDD ஆகிய இரண்டும் இருக்கும் கணணியை தெரிவு செய்யுங்கள். உங்களிடம் ஏற்கனவே கணனி இருந்தால் உங்களால் SSD இற்கு upgarde செய்யமுடியும். OS, அப்ளிகேஷன் , சாப்ட்வேர்கள் மற்றும் கேம்ஸ் போன்றவற்றை SSD யிலும். பைல்ஸ் டாக்குமென்ஸ், வீடியோகள் மற்றும் அதிக கொள்ளளவுடைய அனைத்தையும் HHD யிலும் பயன்படுத்துவது சிறந்தது.
0 கருத்துகள்