தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம்... (தரவு, தகவல், பயன்படுத்தப்படும் துறைகள்)

தரவு என்றால் என்ன? (What is Data)

தரவு என்பது தெளிவான ஆனால் அர்தமற்ற மற்றும் ஒழுங்கற்ற விடயங்களாகும். இதனைக் கெண்டு எந்த விதமான தீர்மானத்திற்கோ அல்லது முடிவிற்கோ வரமுடியாது.

உதாரணம்:

  • சுபைரின் உயரம் 160 cm களாகும்.
  • அவனது பெயர் அஸீஸ்
  • ரேஜா வெள்ளை நிறமானது.
  • நியாஸிற்கு கணிதத்தில் 40 புள்ளிகளாகும்

மேற்சொன்ன உதாரணங்களில் உள்ள தரவுகரளை குறிப்பிட்ட செயன்முறைக்கு அல்லது ஒழுங்கமைப்புக்கு உட்படுத்தினாலயே பிரயோசனமிக்கவையாக மாற்றமடையும், இவ்வாறான ஒரு நிலையில் இது தகவலை பெறுவதற்கான raw data எனவும் அழைக்கப்படும்.

தரவுகள் சேகரிக்கப்பட்டிருக்கும் வடிவங்கள்.(Forms of Data)

  1. எழுத்து வடிவங்களில் (Text)
  2. இலக்கங்கள் (1,2,3,4,5......)
  3. எழுத்துக்கள் (A-Z, a-z, - .. ........)
  4. குறியீடுகள் (;, +, -, .......)
  5. விஷேட குறியீடுகள் (@, &, #,........)
  6. கற்புல வடிவங்கள் (Visual)
  7. செவிப்புல வடிவங்கள் (Audio)

தகவல் (Information)

தகவல் என்பது ஒரு முடிவினை எடுக்க உதவக் தேவையினை

பூர்த்தி செய்யக்கூடியதுமான ஒரு செயன்முறைக்கு உட்பட்ட தரவே (Processed Data) தகவல் எனப்படும்.

Eg. நியாஸ் வகுப்பில் 1ம் இடம், றியாஸ் அஹமட்டை விட நிறை கூடியவன், நேற்று நுவரெலியாவில் அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேலும்

ஒரு விடயம் செயன்முறைப்படுத்தப்பட்டிருந்தாலும் அது தேவையினையும், நோக்கத்தினையும் பொறுத்தே தகவலா அல்லது தரவா என தீர்மானிக்கப்படும்.

Eg. ஒரு குறித்த வகுப்பில் கணிதப்பாடத்தில் சித்தியடைந்த மாணவர்களின் தொகை குறித்த பாட ஆசிரியருக்கும், பாடசாலைக்கும் தகவலாக இருக்கும் அதே நேரம் கல்வியமைச்சு அகில இலங்கையில் மாணவர்கள் தொடர்பான ஆய்வின் போது மேற்சொன்ன தகவல் ஒரு தரவாகவே நோக்கப்படும்.

தகவலின் பண்புகள் (Characteristic of Information)

  • பிரயோசனமிக்கவை, பயனுள்ளதாக இருக்கும்.
  • அறிவை கூட்டாக் கூடியதாக இருக்கும்.
  • குறித்த காலத்திற்குரியதாக இருப்பதோடு தீர்மானங்களை எடுக்க உதவும்.
  • குறித்த விடயத்துடன் தொடர்பானதாக இருக்கும்.
  • புதிய விடயமாக இருக்கும்.
  • சரியானதாக இருக்கும்.

தகவலின் பயன்கள் (Usefulness of Information)

  • ஆறிவினை விருத்தி செய்வதற்கு
  • நாளாந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு
  • ஒரு குறித்த விடயத்தினை திட்டமிட
  • ஒரு குறித்த விடயம் தொடர்பாக எதிர்வு கூற

வினாக்கள்:

1. தரவிற்கு உதாரணம் 5 தருக?

2. தகவல் எப்போதும் தகவலாக பயன்படுத்தப்படுமா? இல்லை எனில் அவ்வாறான சந்தர்ப்பங்கள் 3 தருக?

3. தகவல் மற்றும் தரவிற்கிடையிலான வேறுபாடுகள் 3 தருக?

தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம்

Information Communication Technology

தகவலை பயன்படுத்துவதற்காக, தகவலை பெறுதல், சேமித்தல், கையாளுதல், பரிமாரல், முகாமித்தல் போன்ற செயற்பாடுகளுக்காக கணனி வன்பொருள், மென்பொருள், வலையமைப்பு, தொடர்பாடல் தொழில்நுட்பம், இணையம், தரவுத்தளம், தொடர்பாடல் கருவிகள், அவற்றை பயன்படுத்தும் மனிதர்கள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றை இணைப்பதற்கான தொழில்நுட்பமே தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் எனப்படும்.

இவ் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது கனணியுடன் தொடர்புபட்டிருப்பதனால் இதனுடைய தேவை பல்வேறு துறைகளிலும் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. அந்த வகையில் ICT னால் பயனபெறும் துறைகளாவன.

கல்வித்துறை (Education Sector)

கணனியை ஆதாரமாகக் கொண்டு கற்றல் (Computer Aided Learning - CAL) சம்பிரதாயபூர்வமான கற்றல் முறைகளுக்குப் பதிலாக கணனியை மூலாதாரமாகக கொண்டு கற்றல்.

  • கணனியை அடிப்படையாகக் கொண்டு கற்றல் (Computer Based Learning)
  • கல்விச் செயற்பாட்டிலே கணனியை ஒரு பிரதான உபகரணமாகப் பாவித்தல்.
  • கணனியை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்தல் (Computer Based Assessment)
  • மதிப்பீட்டு வேலைகளுக்காக கணனியை உபயோகித்தல்.
  • வலைத் துணையுடனான கற்பித்தல் (WBT- Web Based teaching) எனவும் அழைக்கப்படும்
  • தொலைக்கல்விக்கு வசதியளிக்கின்றது (Distance Learning).
  • நிகழ்நேர (online) பரீட்சைகளுக்கான சந்தர்ப்பங்கிடைக்கின்றது. பாடசாலை நிர்வாகத்திற்கு வசதியளிக்கின்றது.
  • பல்லூடக தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கல்விச்செயற்பாட்டை மேற்கொள்ளல். (Multimedia Technology)
  • இலத்திரனியல் கல்வி முறைமை (e-education), இலத்திரனியல் கற்கை (e-learning) போன்ற புதிய எண்ணக்கருக்களின் அறிமுகம்.

சுகாதாரத்துறை (Health Sector)

CT Scanners, MRI Scanners, ECG, EEG போன்ற சாதனங்களின் பயன்பாடுஇக்கருவிகளை பயன்படுத்தி நோய்களை துள்ளியமாக கண்டறியக் கூடியதாக இருப்பதனால் வினைத்திறனானதும், துள்ளியதுமான சேவைகளை வழங்கக்கூடியதாக இருக்கின்றது.

  • வைத்திய நிபுணர்களை தொடர்பு கொள்ளக்கூடிய c-channeling வசதி.
  • வைத்தியசாலை நிர்வாகத்திற்கு வசதியளிக்கின்றது.
  • தொலை அறுவைச் சிகிச்சை முறைக்கு வசதியளிக்கின்றது.

 வங்கி மற்றும் நிதித்துறை (Bank and Finance Sector)

  • வங்கிகள் கணனி மயப்படுத்தப்பட்டிருப்பதனால் எமது வேலைகளை இலகுவாகவும் விரைவாகவும் முடிக்கக்கூடியதாக இருக்கின்றது.
  • வங்கிக் கிளைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருப்பதனால் எந்தவொரு வங்கிக் கிளையிலும் எமது கொடுக்கல் வாங்கலைச் செய்யமுடியும்.
  • Tele Banking, Phone banking, Net banking என வங்கிக்கு செல்லாது வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வசதி.
  • இணையத்தைப் பயன்படுத்தி சர்வதேச நிதி நிறுவனங்கள் இலகுவாக கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளக்கூடிய வசதி
தொடர்பாடல் துறை (Communication Sector)
  • முன்வைப்புகள் (Presentations)
  • ஏதாவதொரு தலைப்பிற்கேற்ப அதில் அடங்கியவைகளைக் கணனியூடாகவோ அன்றி வேறுமுறைகளினூடாகவோ பார்வையாளர்களுக்கு முன்வைக்கும் செயற்பாடு இவ்வாறு அழைக்கப்படும்.
  • Telecommunicating வீட்டிலிருந்தவாறு தொடர்பாடல் வலையூடாக காரியாலயக் கடமைகளை மேற்கொள்ளல்.
  • ஒளிப்பட உரையாடல். (Video Conferencing) வெவ்வேறு இடங்களிலுள்ளவர்களுக்கிடையில் கட்புல - செவிப்புல தரவு, தகவல் பரிமாறிக் கொள்ளகணனி வலை மூலம் ஏற்படுத்தப்படும் ஓர் உரையாடலாகும்.
  • தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கை போன்றன தமது தொடர்பாடல் நடவடிக்கைகளுக்காக கணனியையே நம்பி இருக்கின்றமை.
  • இணையம் மூலம் பூகோள கிராமம் (Global Village) எனும் எண்ணக் கரு தோற்றம் பெற்றமை.

போக்குவரத்து துறை (Transport Sector)

  • மோட்டர் வாகனப் பதிவு, சாரதி அனுமதிப்பத்திரம் போன்றவை கணனி மயப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றது.
  • விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு (Air Traffic Control), விமான அனுமதிச் சீட்டு விநியோகம் (Electronic Ticket) மற்றும் ஆசன ஓதுக்கீடு (Rescrvation of Seats)
  • வாகன போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாடு (Traffic control)
  • செய்மதி கட்டுப்பாடு (Satellite control)

 

ict grade 10 notes

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu