விரிதாள் Excel Grade 9

விரிதாள் என்பது யாது ? 

விரிதாள் என்பது ஆதியில் கணக்காளர்கள் தாளைப் பயன்படுத்திக் கணிப்பதற்குப் பயன்படுத்திய முறையியலுக்காகத் தற்போது உள்ள இலத்திரனியல் ஆவணமாகும் . சார்புகளையும் ( Functions ) சூத்திரங்களையும் ( Formula ) பயன்படுத்திக் கணிப்பு ( Calculations ) , தரவு வரிசையாக்கம் ( Sorting ) , வரைபுகளை அமைத்தல் போன்ற கணிதப் பணிகளுக்கும் கணக்கீட்டுப் பணிகளுக்கும் பயன்படுத்தத்தக்க நிரல்களையும் ( Columns ) நிரைகளையும் ( Rows ) கொண்ட ஆவணம் விரிதாள் ( Spreadsheet ) ஆகும் . 

விரிதாள் மென்பொருளைப் பயன்படுத்திக் கணினியின் மூலம் மின் விரிதாளைப் பயன்படுத்தலாம் . விரிதாள் மென்பொருள் ஒரு பிரயோக மென்பொருளாகும் . மின் விரிதாளில் ஆவணத்தைத் தயாரிப்பதற்குப் பணிநூல் ( Workbook ) பயன்படுத்தப் படுகின்றது . அப்பணிநூலின் பணித்தாள்களைக் ( Worksheets ) கொண்டு ஆவணத்தைத் தயாரிக்கலாம் . ஆவணத்தை அமைப்பதற்குப் பல கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன . அவற்றின் தொழில்களை இனங்காண்போம் .

என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu