இரவில் கண்விளித்து கற்றல் ஆனது மனித மூளையின் வினைத்திறனை குறைக்கும் என்பது விஞ்ஞான ரீதியாக உருதிப்படுத்தப்பட்ட ஒரு விடயமாகும். இரவில் கணிவிழித்து கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுவதால் மூளையின் விணைத்திறனை குறைக்க வழிவகுப்பதோடு இதனால் மனிதன் உடல் சோர்வு மற்றும் மனிதனின் பௌதீக செயற்பாடுகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும்.
மேலும் இரவு நேரம் என்பது அமைதியான நேரம் என்பதால் இரவில் சாதாரனமாக படிப்பது வரவேற்கத்தக்கதாகும். எனவே நீங்கள் இரவு வேளையில் படிப்பவராக இருந்தால் உங்களுடைய உறங்கும் அளவை கருத்தில் கொள்வது முக்கியமாகும். இது கற்றல் செயற்பாட்டின் வினைத்திறனை அதிகரிப்பதுடன். மணணம் செய்யும் திறனையும் அதிகரிக்கின்றது.
2. பாடங்களை வகைபிரித்து கற்றல் (Categorize the subjects)
அளவில் பெரிய பாடங்களை கற்கும் போது மனித முளையானது அதிகமாகவும் விரைவாகவும் சோர்வடையும். பொதுவாக மனிதன் தொடர்ந்து 20 இலிருந்து 30 நிமிடக் கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டாலே சேர்வடைவான என்பது விஞ்ஞான ரீதியாக உருதி செய்யப்பட்ட ஒரு விடயமாகும். இதன் மூலம் கற்றல் செயற்பாடு குறைவடைவதோடு மணணம் இடும் திறன் அல்லது ஆர்வம் குறைவடையும். மேலும் ஒரு தொகுதி படத்தை பகுதிகளாக பிரித்து கற்கும் போது சிறிய மற்றும் பெரிய தரவுகளை (பாடம்) முழுமையாக விளங்கிக் கொள்ள முடியும்.
3. கற்றதை கொண்டு கற்பித்தல் (Teaching with what you learned)
கற்றல் செயற்பாடு ஆனது முழுமையடைய கற்றதைக் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தல் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு மாணவர் கற்ற விடையத்தை மற்றுமொரு நபருக்கு கற்றுக்கொடுக்கும் போது அம்மாணவர் குறிப்பிட்ட படாத்தில் அதிக தேர்ச்சி உடையவராக மாறுகின்றார். மேலும் இதனால் ஏற்கனவே கற்ற பாடங்கள் மீண்டும் மீண்டும் மூளையில் பதிய வழிவகுக்கின்றது.
இதனை ஆல்பட் ஐன்ஸ்டீன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் “ஒரு விடயத்தை இலகுவாக தெளிவு படுத்த முடியாவிட்டால் அவ்விடயம் உங்களுக்கே இன்னும் தெளிவாகவில்லை”
எனவே கற்பித்தல் செயற்பாடுகளின் மூலம் நீங்கள் கற்றவிடயங்கள் உங்களுடை மூளையில் எந்த அளவு ஞாபகத்தில் உள்ளது என்பது பற்றி இதன் மூலம் அறிந்து கொள்ளளாலம்.
4. கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் இடம் (Place of learning)
ஒரு மாணவர் எவ்வகையான சூழலில் இருந்து கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்கின்றாறோ அவ்வாரான சூழலிலேயே அவருக்கு கற்ற தரவுகள் நினைவுக்கு வரும் என்பது விஞ்ஞான ரீதியாக உருதிப்படுத்தப்பட்ட ஒரு விடயமாகும்.
உதாரணமாக குறிப்பிட்ட ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த எந்த இடத்தில் அந்த யோசனை வந்ததோ அந்த இடத்தில் சென்று யேசனை செய்வதன் மூலம் மறந்த அந்த விடயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளளாலம்.
எனவே கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது பரீட்சை அரை போன்ற அமைதியான இடத்தில் கற்றல் முக்கியமானதாகும். மேலும் கற்றலுக்காக மேசையை பயன்படுத்துவது முக்கியமானதாகும்.
5. மன வரைபடம் (Mind map)
மன வரைபடம் எனப்படுவது குறித்த ஒரு பாடத்தின் கீழ் உள்ள அனைத்து தலைப்புகளையும் அல்லது தரவுகளையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்துவதாகும். இவ்வாறு தொர்பு படுத்துவதன் மூலம் குறித்த படாடத்தின் அனைத்து பகுதிகளையும் விரைவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக அமைவதோடு, இலகுவாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் முடியும்.
இது அதிகமான பாடங்களை கற்கும் கற்றல் செயற்பாட்டின் வினைத்திறனை அதிகப்படுத்தும் மன வரைபட ஆனது கைளால் எழுதாமல் ஞாபகத்தில் வைத்து மற்றும் கைகளைப் பயன்படுத்தி எழுதியும் பயன்படுத்தப்படும். இதில் கைகளைப் பயன்படுத்தி எழுதி அதனை அடிப்படையாக வைத்து கற்றல் செயற்பர்டுகளை ஆரம்பிக்கும் போது அதிக வினைத்திறன் கொண்டதாக மாறும்.
6. சிறு குறிப்பு எடுத்தல் (Taking sort notes)
சிறு குறிப்பு எடுப்பதால் குறித்த படாத்தின் முக்கியமாக குறிப்புகள் ஆனது இலகுவாக விளங்கிக் கொள்ள கூடியதாக அமையும். மேலும் சிறு குறிப்பு எடுக்கும் போது கைகளை பயன்படுத்தி எழுதப்படுவதால் மனித மூளையில் அதிகமாக பதியக்கூடிய வகையிலும் காணப்படும்.
7. பாடங்களை வகைப்படுத்தல் (Study classification)
பொதுவாக மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடும் பாடங்களானது இரு வகைப்படும்.
செயன்முறையுடன் தொடர்புடையவை
செயன்முறையுடன் தொடர்பற்றவை
செயன்முறையுடன் தொடர்புடைய பாடங்களை படிக்கும் போது கற்ற பாடங்களை அன்றாட வாழ்வின் செயன்முறையுடன் தொடர்பு படுத்தியோ அல்லது செயன்முறைகளை கண்களால் அவதானித்தோ ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியும். உதாரணமாக மனித உடலின் பகுதிகளை கற்றலுக்காக தேர்ந்தெடுத்தால் மனித உடலின் அமைப்புகளை கண்களால் அவதானித்து கற்ற தரவுகளை தொடர்பு படுத்துவதன் மூலம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளளாலம்
செயன்முறையுடன் தொடர்பற்ற பாடங்களைப் பொருத்த வரை மேலே குறிப்பிட்ட மன வரைபடம் மூலம் பாடங்களை தொடர்பு படுத்தி கற்றல் மற்றும் மீண்டும் மீண்டும் கற்றல் மூலம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளளாலம்.
8. கற்றல் படிமுறை (Learning algorithm)
குறித்த ஒரு பாடத்தை கற்க ஆரம்பிக்க முன்னர் செய்ய வேண்டிய விடயங்கள் மற்றும் கற்ற பின் செய்ய வேண்டிய விடயங்களை இது உள்ளடக்குகின்றது. இவ்வாறு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடும் போது இலகுவாக கற்ற செயற்பாடுகளை ஞாபகத்தில் வைத்திருக்க முடியும்.
பாடத்தை மேலோட்டமாக அவதானித்தல் அல்லது வாசித்தல்
குறித்த பாடத்தில் கேற்கப்பட்டுள்ள கேள்விகளை அவதானித்தல்
பாடத்தை முழுமையாக வாசித்தல்
வாசித்த அல்லது படித்தல் பாடத்தை புத்தகத்தை மூடிக் கொண்டு மீட்டல் செயற்பாடுகளை மேற்கொள்ளல்
மேலே குறிப்பிட் படிமுறையை பயன்படுத்தி கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வது அதிக நேரத்தை எடுக்கக் கூடியதாக காணப்பட்டாலும் இதன் வினைத்திறன் அதிகமாக காணப்படும் அதாவது இவ்வாறு மேலே குறிப்பிட்ட படிமுறைகளை பயன்படுத்தி கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடும் போது குறித்த பாடத்தில் அதிக தெளிவை பெற்றுக் கொள்ளக் கூடியவாராக அமையும்.
0 கருத்துகள்