முறைமையை நிறுவுதல் Grade 11 unite 2.3

 முறைமையை நிறுவுதல் (Deployment of the system)

தவறு நீக்கப்பட்ட புதிய முறைமையை நிறுவுதல் இந்தப்படியில் மேற்கொள்ளப்படும். முறைமையை நிறுவும் முறைகள் வருமாறு :

1) நேரடியாகச் செயற்படுத்தல் (Direct Implementation)

2) சமாந்தரமாகச் செயற்படுத்தல் (Parallel Implementation)

3) வெள்ளோட்ட முறைச் செயற்படுத்தல் (Pilot Implementation)

4) கட்டங்களாகச் செயற்படுத்தல் (Phase Implementation)

நேரடியாகச் செயற்படுத்தல் (Direct Implementation)

பழைய முறைமையின் செயற்பாட்டை முழுமையாக நிறுத்தி புதிய முறைமை செயற்படுத்தப்படும். புதிய முறைமை வெற்றியளிப்பின் அது தொடரப்படும்.

உதாரணம் : நூலக கைமுறை தகவல் முறைமையை முழுமையாக நிறுத்தி நூலக முகாமை மென்பொருளை (Library management software) நிறுத்தல்.

ict grade 11 tamil notes

 சமாந்தரமாகச் செயற்படுத்தல் (Parallel Implementation)

இதன்போது தற்போது பாவனையில் உள்ள முறைமை மற்றும் புதிய முறைமை ஆகியன ஒரே நேரத்தில் சமாந்தரமாகச் செயற்படுத்தப்படும். புதிய முறைமை வெற்றிகரமாக அமையுமாயின் பழைய முறைமை நிறுத்தப்பட்டு புதிய முறைமை செயற்படுத்தப்படும்.

உதாரணம் : பழைய நூலக முறைமை செயற்படுத்தப்படும் அதேவேளை புதிய முறைமையும் நிறுவிச்செயற்படுத்தல்.

வெள்ளோட்ட முறைச் செயற்படுத்தல் (Pilot Implementation)

இந்த முறைமை சிறிய பிரதேசமொன்றில் முதலில் நிறுவப்படும். இதன்போது முழுமையான முறைமை தெரிவுசெய்யப்பட்ட மாவட்டத்தில் முதலில் நிறுவப்பட்டு செயற்படுத்தல் மேற்கொள்ளல்.

உதாரணம் : வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட முறைமை முதலில் ஒரு மாகாணத்திற்கு மட்டும் நிறுவப்பட்டு பின்னர் முழு மாகாணங்களுக்கும் நிறுவப்படல்.

  கட்டங்களாகச் செயற்படுத்தல் (Phase Implementation)

இங்கு தெரிவுசெய்யப்பட்ட பகுதிகள் கட்டங்களாக தனித்தனியே பிரதேசத்தில் அல்லது கிளையில் படிப்படியாக நிறுவப்படும்.

உதாரணம் : புதிய நூலக முறைமையை நிறுவி அதன் பின்னர் அது பாடசாலை முகாமைத்துவ முறைமையுடன் தொடர்புபடுத்தப்படல்.

4.     முறைமையைப் பராமரித்தல் (Maintenance of the system)

புதிய முறைமையை நிறுவிய பின்னர் முறைமையைக்குறிப்பிட்ட காலம் வரை பராமரித்தல் வேண்டும்.முறைமைப் பராமரிப்பின்போது கணினி, கணினி வலையமைப்பு, கணினி மென்பொருள்கள் ஆகியனவும் பராமரிக்கப்படும். முறைமையைப் பராமரிக்கும்போது விருத்தி செய்யப்பட்ட முறைமையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் வருமாறு :

·        புதிதாக இனங்கண்ட பயநர் தேவைகளை முறைமையில் உட்படுத்தல்

·        முறைமையைப் பரீட்சிக்கும் போது இனங்காணப்படாததும் முறைமையைச்செயற்படுத்தும் போது இனங்காணப்பட்டதுமான சிறு பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்குதல்

·        நவீன தொழினுட்ப மேம்பாட்டை முறைமையில் புகுத்துதல் மூலம் முறைமையின் வினைத்திறனை மேம்படுத்தல்.

முறைமை விருத்தி மாதிரியங்கள்

முறைமை விருத்தி ஆயுள் வட்டத்தில் பல்வேறு மாதிரியங்கள் உள்ளன. இதிலுள்ளஒவ்வொரு மாதிரியத்தின் மூலமாகவும் முறைமை விருத்தி அணுகுமுறை பல்வேறு வழிகளில் நடைமுறைப்படுத்தப்படும்.

1. நீர்வீழ்ச்சி மாதிரியம் (Waterfall Model)

2. ஊடாட்ட விருத்தி மாதிரியம் (Iterative Incremental Model)

3. மூலவகை மாதிரியம் (Prototype Model)

4. சுருளியுரு மாதிரியம் (Spiral Model)

நீர்வீழ்ச்சி மாதிரியம் (Waterfall Model)

நீர்வீழ்ச்சி மாதிரியத்துக்கு வலய முறைமை விருத்தி தகவல் முறைமை உதாரணமாகும். ஆயுள்வட்டப் படிமுறைகள் நேர்கோட்டில் நடைமுறைப்படுத்தப்படல் நீர்வீழ்ச்சி மாதிரியம் மூலம் காட்டப்படும். இந்த மாதிரியத்துக்கமைய முறைமையை உருவாக்கும்போது கவனிக்க வேண்டியவை வருமாறு.

  • ·        முதலில் தேவைகள் நன்கு இனங்காணப்பட வேண்டும்.
  • ·        ஒரு படிமுறை பூரணமான பின்னரே அடுத்த படிமுறை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
  • ·        விருத்தி செய்யும் முறைமையின் இறுதிப் பெறுபேற்றை இறுதிக் கட்டத்திலேயே காணமுடியும். இதன் காரணமாக எதிர்பாராத பெறுபேறுகள் கிடைக்கலாம்.

ict tamil notes

ஊடாட்ட விருத்தி மாதிரியம்.

இந்த மாதிரியத்தின் இயல்புகள் வருமாறு

  •  இந்த விருத்தி மாதிரியத்தின் பிரதான நோக்கம் ஒரு தடவையில் சிறு பகுதிகளாக மீண்டும் மீண்டும் ஊடாட்டத்துக்குள்ளாவதும் அவ்வாறான எல்லா ஊடாட்டங்களின் போதும் மேம்படுத்தப்படும் (Incremental) வகையிலான முறைமையை விருத்தி செய்தலாகும்.
  • முறைமை விருத்தியாளர்கள் (System developers) முன்னைய படிமுறைகளில்பெற்றுக் கொண்ட அறிவைப் பயன்படுத்த முடிவது அனுகூலமாகும்.
  • முறைமைகளின் தேவையை எளிமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமாக இதன் பிரதான படிமுறை ஆரம்பமாகும்.
  • முறைமை முழுமையாக விருத்தி செய்யப்படும் வரை ஊடாட்டம் மூலம் விருத்தி செய்யப்படும்.
  •  அனைத்து ஊடாட்டங்களின்போதும் முறைமையின் திட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதுடன் புதிய செயன்முறையும் சேர்க்கப்படும்.

ict tamil note grade 11


 

 



கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu