ஒரு கொம்ப்யூட்டரோ , லப்டப்போ, மொபைல் போனோ வாங்க வேண்டும் என்றால் முதலில் அனைவரும் கவனிப்பது, அதில் உள்ள ரம் இன் கொள்ளளவு பற்றித்தான். ஏனெனில் ரம்மை பொறுத்துதான் அந்த உபகரணத்தின் செயல்திறன் இருக்கும். இன்றைய நிலையில், குறைந்த பட்சம் 4 ஜிபி ரம் ஒரு கம்ப்யூட்டர் இயங்கத் தேவையாய் உள்ளது. இது ரேண்டம் அக்சஸ் மெமரி என்று ஆங்கிலத்திலும், தற்போக்கு பெருவழி நினைவகம் என்று தமிழிலும் கூறப்படும்.பொதுவாக (Mother board) தாய்ப்பலகையில் இது அமைக்கப்பட்டு இருக்கும்.
DDR என்றால் என்ன?
தற்போது நாம் வாங்கும் பொருட்களில் DDR3 ரேம் என்று குறிப்பிட்டுள்ளதை பார்த்திருப்போம். Double Data Rate என்பதின் சுருக்கமே DDR. இரண்டு மெமரி பரிமாற்றங்கள் நடப்பதால் இதற்கு இந்த பெயர் வந்தது. இந்த DDR ரேம் தற்போது DDR, DDR2, DDR3,DDR4 உள்பட பல விதங்களில் கிடைக்கின்றது.
0 கருத்துகள்