இதில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள் மின்னாற்றல் இல்லாதநிலையிலும் அழிவதில்லை. எனவே ஆங்கிலத்தில் Non Volatile Memory எனவும் தமிழில் அழிவுறா நினைவகம் என்றும் குறிப்பிடப்படுகிறது. ROM இல் இருக்கக்கூடிய தகவல்களை அழித்திட முடியாது என்பதனால் பொதுவாக இயங்க தேவையான புரோகிராம்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த புரோகிராம்கள் தான் ஒரு ஹார்டுவேர் கருவி எவ்வாறு செயல்பட வேண்டும், மற்ற கருவிகளோடு எவ்வாறு தொடர்பு கொள்ளவேண்டும் என என்பதற்கான வழிமுறைகளை வழங்குகின்றது. உதாரணமாக கணினியை ON செய்யவும் Input / Output கருவிகளின் செயல்பாட்டிற்கும் ROM இல் நிரந்தரமாக இருக்கும் புரோகிராம்கள் பயன்படுகின்றது. இந்த புரோகிராம்கள் ரோம் உட்பத்தி செய்யும் நிறுவனத்தினால் ரோம் இனுள் சேமிக்கப்பட்டு மதர் போர்ட்டில் பொருத்தப்படும். மேலும் இந்த ROM ஆனது வித்தியாசமான சில வகைகளிலும் கிடைக்கிறது. மேலும் இந்த ROM ஆனது வித்தியாசமான சில வகைகளிலும் கிடைக்கிறது.
இன்று கணனியில் மட்டும் அல்லாது நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன், பிரிண்டர் மற்றும் ஸ்மார்ட் கேமராக்களில் கூட இந்த ரோம் பயன்படுத்தப்படுகிறது.
0 கருத்துகள்