சமூகமும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பவியலும்.

 பொழுதுபோக்கிற்காகத் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பவியல்

i. முப்பரிமாண உருவத் தொழினுட்பம்(3D - தொழினுட்பம்):

உயிரோட்டமுள்ள திரைப்படங்களை உருவாக்குவதற்காக இத்தொழினுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்திரைப்படங்களைப் பார்ப்பதற்காக விஷே மூக்குக் கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன.

ii. ஹொலோகிராபிக் விம்பங்களைக் காட்சிப்படுத்தும் தொழினுட்பம்(Holographic image processing technology); ஒரு இடத்தில் படமாக்கப்பட்ட உருவத்தின் விம்பத்தை இன்னுமொரு தளத்தில் காட்சிப்படுத்துவதற்காக இது பயன்படுத்தப்படுகின்றது.

III. கேலிச்சித்திரத் திரைப்படம்:

மும்பப்பரிமான மற்றும் மேம்பட்ட மென்பொருட்களைப்பயன்படுத்தி உருவாக்கப்படும் கேலிச்சித்திரங்கள்.

iv. இலக்கமுறை செவிப்புலப் பதிப்புகள்.

இசையமைப்பு, இசைக்கருவிகளின் இயக்கத்திற்குமென விஷேட மென்பொருட்கள் மற்றும் கருவிகளின் பயன்பாடு. மற்றும் அதிகமான பாடல்களை தேக்கி வைப்பதற்கான வசதி.

v. இலக்கமுறை விளையாட்டுக்கள்(Digital Games):

vi. பாவனை விளையாட்டுக்கள்(Simulation games):

வெளிப்பாவனைகளை கணனியில் உள்வாங்கப்பட்டு அதற்கமைய செயற்படும் விளையாட்டுக்கல். இவ்விளையாட்டுக்கள் பயிற்சியளித்தல், பகுப்பாய்வு செய்தல், திட்டமிடுதல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும்.

 

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பத்தைப் பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகள்

சட்டப் பிரச்சினைகள்:

1. பிரத்தியேகத் தரவுகளைக் களவாடுதல்:

ஒருவரைப் பிரத்தியேகமாக இனங்காண்பதற்கு உள்ள தகவல்களைக் கணினியிலிருந்து அல்லது தரவு வங்கியிலிருந்து திருடுதல்,

உதாரணமாக: கணக்கிலக்கம், கடவுச்சொல், பயனர் பெயர், வரவு அட்டை விபரம், இலக்கமுறைப்படங்கள், etc

2. அனுமதியின்றி கணினித் தொகுதிக்குள் பிரவேசித்தல்:

கணனித் தொகுதியில் அல்லது வலைத்தளத்தில் அனுமதியின்றி உழ்நுழைந்து அல்லது பயநர்பெயர், கடவுச்சொல்லை திருடி உள்நுழைந்து நிறுவன அல்லது நபர்களின் தரவுகளை திருடுதல்.

3. நுண்ணறிவுச் சொத்தைக் களவாடல்:

ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் மேற்கொண்ட புதிய உற்பத்தி அல்லது ஒரு படைப்பு தொடர்பான விபரம் அல்லது அறிவு நுண்ணறிவுச் சொத்து ஆகும். இதனை உரிய நுண்ணறிவுச் சொத்து உரிமையாளரின் அனுமதியின்றி பயன்படுத்துவது நுண்ணறிவுச் சொத்து களவாடல் எனப்படும். இது ஒரு குற்றமாகும் இதற்காக உரிய கண்டுபிடிப்பாளருக்கு அவரது படைப்பிற்கான ஆக்கவுரமை உத்தரவுச்சீட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும்.

4. மோசடிகள்: நிறுவனங்களின், நபர்களின் கையொப்பம் மற்றும் விபரங்களை பயன்படுத்தி களவாக ஆவணங்களை நகல் செய்தல், கடனட்டை மூலம் மோசடி செய்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

விழுமியப் பிரச்சினைகள்

1. எழுத்துத் திருட்டு (Plagiarism)

ஒரு படைப்பாளியின் கருத்துக்கள், கட்டுரைகள், வேறு ஆக்கங்கள் ஆகியவற்றை நகல் செய்து அவருடைய அனுமதியின்றி அதனைத் தனது ஆக்கமாக முன்வைத்தல் எழுத்துத் திருட்டு(Plagiarism) எனப்படும்.

ஒருவரது ஆக்கங்களை பின்வரும் வழிகளில் பயன்படுத்தலாம்:

1. எடுத்துக் காட்டல் (Citing): எழுத்தாளர்களின் அல்லது எழுத்தாளர்களின் தகவல்களைக் குறிப்பிடுதல்

2. மேற்கோள் காட்டல் (Quoting): நகல் செய்யப்பட்ட பகுதியைத் தலைகீழ்க் காற்புள்ளிகளில்(“.....”) காட்டல்.

3. ஆதாரக் குறிப்பு (Referencing); தகவல்கள் பெறப்பட்ட வலைப் பக்கத்தைக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிடுதல்.

பௌதீக மற்றும் தர்க்கப் பிரச்சினைகளும் அவற்றுக்கான பாதுகாப்படு ஏற்பாடுகளும்

பௌதீக பிரச்சினைகளும் அவற்றுக்கான பாதுகாப்புகளும்

1. தடைப்படாத வலு வழங்கல்(Uninterrupted Power Supply - UPS)

எதிர்பாராமல் ஏற்படும் மின் தடைகளினால் கணனிகளுக்கும் ஆவணங்கும் ஏற்படும் சேதத்தைக் குறைப்பதற்காக மின் தடைப்படுகின்ற சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக மின்னோட்டத்தை வழங்குவதற்காக இது பயன்படும்.

2. வன் தீச்சுவர்(Hardware Firewall):

கணனி மற்றும் வலையமைப்பினுள் அனுமதியற்ற முறையில் உட்பிரவேசம் இடம்பெறுவதினைத் தடுப்பதற்காக கணனியுடன் அல்லது வலையமைப்புடன் தீச்சுவர் பொருத்தப்படும்.

3. கதவு மூலம் மட்டுப்படுத்திய பிரவேசம்:

அனுமதியளிக்கப்பட்டவர்களை மாத்திரம் கணனி ஆய்வு கூடத்தினுள் உட்பிரவேசிக்கச் செய்வதற்கான

அனுமதிளித்தல். இதற்காக விரல் அடையாளத்தினை, இலத்திரனியல் அனுமதி அட்டை போன்றவற்றினால் கட்டுப்படுத்தப்படும் உட்பிரவேச அனுமதியினை வழங்கல்.

4. மூடிய சுற்றத் தொலைக்காட்சி(CCTV)

கணினி ஆய்வு கூடத்தை மூடிய சுற்றுத் தொலைக்காட்சியைப் பயன்படுத்தி கண்கானித்தல். இதன் மூலம்வெளிநபர்களின் பாதிப்புக்களிலிருந்து கணனி மற்றும் வலையமைப்பைப் பாதுகாக்கலாம்.

5. எழுச்சிப் பாதுகாப்பி(Surge Protector):

வுளமையான நியம வோல்ற் அளவினை விட கணனி மற்றும் ஏனைய கணினி சார் சாதனங்களுக்கு மின் சாரம் வழங்கப்படும் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்பதற்காக இச்சாதனம் பயன்படுத்தப்படும்.

6. சுற்றாடல் காரணனிகள்:

கணனி ஆய்வு கூடுத்தை ஈரலிப்பு மற்றும் தூசியில்லாது பாதுகாத்தல் தர்க்கப் பாதுகாப்பு(Logical Security)

1. கடவுச்சொல் (Password);

கணினியில் அனுமதியின்றிய பிரவேசத்தை கட்டுப்படுத்தவும், கணனியில் சேமிக்கப்பட்டுள்ள ஆவணங்களை

பாதுகாக்கவும் கடவுச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

2. மென் தீச்சுவர்:

கணனி மற்றும் வலையமைப்பினுள் அனுமதியற்ற முறையில் உட்பிரவேசம் இடம்பெறுவதினைத் தடுப்பதற்காக கணனியுடன் அல்லது வலையமைப்புடன் தீச்சுவர் பொருத்தப்படும்.

3. காப்புகள்(Backups) :

கணனித் தொகுதியில் சடுதியாக ஏற்படும் செயலிழப்புக்களால் அதில் உள்ள தகவல்கள் அழிவடையாது. பாதுகாப்பதற்காக அத்தகல்களை டுகள், இறுவட்டுகள், பளிச்சீட்டு தேக்கங்கங்களில் பாதுகாத்து வைத்தலே இதுவாகும். 

தீங்கு பயக்கும் மென்பொருட்கள்(Malicious Software/Malware)

கணினியின் வழமையான செயற்பாட்டிற்கு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய சவாலுக்குட்படுத்தக் கூடிய மென்பொருட்களே தீயமென்பொருட்கள் எனப்படும்.

தீய மென்பொருட்களினால் கணனியிற்கும், கணினி வலையமைப்பிற்கும் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்களை பின்வரும் அறிகுறிகள் மூலம் அடையாளம் காணலாம். 

  • கணனியின் செயற்திறன் குறைவடையும். 
  • கணனியானது அடிக்கடி மீள ஆரம்பிக்கும் கணனி அடிக்கடி செயலிழக்கும்.
  • சில மென்பொருட்கள் இயங்காது போகலாம்
  • சில கோப்புக்களின் கொள்ளவை அதிமாக அல்லது குறைவாக காட்டலாம்
  • புதிய மென்பொருட்களை நிறுவ முடியாது போகலாம்
  • வித்தியாசமான ஒலிகளை எழுப்பலாம்
  • வித்தியாசமான கோப்புக்களை அல்லது படங்களை காட்சிப்படுத்தலாம்.
  • புதிய கோப்புக்கள் மற்றும் ஆவணங்களை உருவாக்கி வன்வட்டின் செயற்திறன் குறைதல்
  • கணனி வலையமைப்பு நலிவடைதல்

தீங்கு பயக்கும் மென்பொருட்களாக பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்.

1. கணினி நச்சு நிரல்(Computer Virus)

2. கணனி வோம்ஸ்(Computer Worms)

3. ஒற்றர்பொருள்(spyware)

4. றொஜன் ஹோஸ் (Trojan Horse)

5. அனாவசிய விளம்பரங்கள் (Adware)

4. பொற்ஸ்(Bots)

5. கொள்ளைக்காரர் (Hijacker/Browser Hijacker)

6. பிஷிங் (Phishing)

7. விரும்பாத அஞ்சல் (Spam)

கணினி நச்சு நிரல்(Computer Virus)

கணனியிற்கு தீங்கு விளைவிக்கும் நோக்குடன் இன்னுமொரு மென்பொருளின் செயற்படுத்தத்தக்க கோப்பினுள் (Executable file) புகுந்து கணனியினுள் உட்பிரவேசித்து தானாகவே நிறுவப்பட்டு தன்னைத் தானே பிரதியெடுக்கும் ஒரு மென்பொருள் இதுவாகும்.

நச்சு நிரல் கணனியினுள் உள்நுழைவதற்கான வழிகள்

·       நச்சுநிரல் பாதிப்புற்ற கணனியில் பயன்படுத்திய CD, DVD, pen drive போன்றவற்றின் மூலம்

·       நச்சு நிரல் பாதிப்புற்ற இணையத்தளங்களை அணுகினால் வலையமைப்பில் நச்சு நிரல் தாக்கமுற்ற கணனிகளுடன் தரவுப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதன் மூலம்.

கணனி புழுக்கல் (Computer worms)

இதுவும் நச்சுநிரல் போன்று தீங்கு விளைவிக்கும் ஆனால் இது தனி மென்பொருளாக கணனியில் நிறுவப்படும் அதேவேளை இதுவும் தானாகவே பல்கிப் பெருகும் தன்மை கொண்டவை.

இது மின்னஞ்சல், போலியான வலைத்தளங்கல் போன்றவற்றின் மூலம் சமூகப் பொறியியல் உத்திகள் பயன்படுத்திbநிறுவப்படும்.

ஒற்றர்பொருள்:

பயனருக்கு தெரியாமல் கணனியில் நிறுவப்பட்டு பயனரின் தனிப்பட்ட இரகசிய தகவல்களை சேகரித்து அனுப்புதல். கணனியின் கட்டமைப்புக்களை மாற்றல், விளம்பரங்களை காட்சிப்படுத்தல் போன்ற விடயங்களை பயனரின் அனுமதியில்லாமல் செய்யக் கூடிய மென்பொருளாகும்.

இது இலவச/ பகுதியளவு இலவச மென்பொருட்களுடன் பயனருக்கு தெரியாமல் நிறுவப்படும்.

இதனை நிபர்த்தி செய்ய Anti-spyware  நிறுவப்படும்

ரோஜன் கோஸ்

இதுவும் தீங்கு பயக்கக் கூடிய ஒரு மென்பொருளாகும். ஆனால் இது தன்னை ஒரு செல்லுபடியான/நம்பகமான மென்பொருளாகக் காட்டி கணனியில் நிறுவப்பட்டிருக்கும். இது தானாக பிரதிபண்ணுவதோ/ஒரு கணனியிலிருந்து இன்னுமொரு கணனியிற்கு பரவுவதோ இல்லை.

இது பயனருக்கு தொந்தரவு விழைவிக்கும் வகையில் POP up windows களைத் திறத்தல், desktop இனை மாற்றல்,ஏனைய தீங்கு பயக்கக் கூடிய மென்பொருட்களை கணனியில் நிறுவுதல் போன்ற செய்கைகளை மேற்கொள்ளும்.

இது மின்னஞ்சல் மூலம் அல்லது இணையத்தினூடாக பதிவிறக்கப்படும் கோப்புக்கள் மூலமும் உள்நுழையும்.

அனாவசிய விளம்பரங்கள்(Adware)

இது நச்சு நிரல் போன்று தீங்கு பயக்கக் கூடிய மென்பொருள் அல்ல ஆனால் பயனருக்கு தொந்தரவு தரத்தக்க வகையில் அடிக்கடி வர்த்தக விளம்பரங்களைக் காட்சிப்படுத்தப்படும். இதனை நிபர்த்தி செய்ய pop blocker/ anti adware பயன்படுத்தப்படும்.

பொற்ஸ்

ஏனைய வலையமைப்புக்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கும் அதேவேளை சுயமாகத் தொழிற்பாட்டுத் தீங்கு பயக்கும் மென்பொருளாகும். இது சடுதிச் செய்திகள் மற்றும் இணையக் கலந்துரையாலின் மூலம் பரிமாறப்படும் பிரத்தியேகத்தகவல்களைச் பயனருக்குத் தெரியாமல் சேகரிக்கும்.

இதன் பெயரானது Robots இலிருந்து பெறப்பட்ட bots ஆகும். கொள்ளைக்காரர்.

ஒரு கணனியில் சேமிக்கப்பட்பட்டிருக்கும் தரவு மற்றும் தகவல்களை அக்கணனி நிர்வாகியின் அனுமதியில்லாமல் பெற்றுக்கொள்பவர்களையே இது குறிக்கின்றது.

பிஷிங்

பயநரை ஏமற்றி பயனரிடமிருந்து அவரது தனிப்பட்ட மற்றும் இரகசியத் தகவல்களை மின்னஞ்சல் மற்றும் இணையத்தினூடாகப் பெற்றுக் கொள்வதாகும்.

இதற்காக பயனருக்கு நம்பகமாக நிறுவத்திடமிருந்து வருவது போன்ற மின்னஞ்சல் அனுப்பப்பட்டு அவரிடமிருந்து வங்கிக்

கணக்கு விபரம் அல்லது மின் கணக்கு விபரங்கள் பெறப்பட்டு அதன் மூலம் பயனரின் தகவல்கள் மற்றும் பணம் திருடப்படலாம்.

விரும்பாத மின்னஞ்சல்கள்

தேவையற்ற முறையில் தொடர்ச்சியாக அனுப்பப்படும் மின்னஞ்சல்களே(Spam) ஆகும்.

இம்மின்னஞ்சல்கள் வர்த்தக விளம்பரமாக, மோசடியான மின்னஞ்சல்களாக, தனிப்பட்ட விபரங்களை கோரக்கூடிய மின்னஞ்சல்களாக இருக்கலாம்.

தீங்கு பயக்கும் மென்பொருட்களிலிருந்து கணினியையும் கணினி வலையமைப்பையும் பாதுகாக்கும் முறைகள்

1. நச்சு நிரல் பாதுகாப்பு மென்பொருனை நிறுவுதல் மற்றும் அதனை அடிக்கடி இற்றைப்படுத்தல்.

உதாரணம்: Avira Antivirus, Avast, AVG, Norton, Kaspersky, MS Security Essential, McAfee, Bit Defender, K7 போன்றவை சிலவாகும்.

2. வெளித்தேக்கங்களை நச்சு நிரல் பாதுகாப்பு மென்பொருள் மூலம் சோதித்த பின் பயன்படுத்தல்.

3. எப்போதும் சட்டரீதியான மென்பொருட்களை கணினியில் நிறுவுதல்.

4. சாதாரண பயன்பாட்டிற்கு கணனி நிரவகிக்கும் கணக்கிற்குப் பதிலாக சாதாரண கணக்கைப் பயன்படுத்தல்

5. பாதுகாப்பான மற்றும் நம்பகமாக இணையத்தளங்களில் இருந்து மாத்திரமே மென்பொருட்களை அல்லது ஆவணங்களை பதிவிறக்கம் செய்தல்.

6. பதிவிறக்கப்பட்ட மென்பொருள்/ ஆவணங்களை நச்சு நிரல் மென்பொருளினால் பரீட்சித்தல்

7. சந்தேகித்திட்கிடமான இணைப்புக்கள் மற்றும் மின்னஞ்சல்களை திறக்க வேண்ட

8. தீச்சுவர் மற்றும் மின்னஞ்சல் வடிகட்டிகளை பயன்படுத்தல்.

இலங்கை தகவல் பாதுகாப்பு நிறுவகங்கள் (Institution for Information Security of Sri Lanka).

1. தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் முகவர் நிலையம்(Information and Communication Technology Agency)

2. இலங்கை கணினி அவசரக் தயார்நிலைக் குழு (Sri Lanka Computer Emergency Readiness Team - CERT)

3. தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ முறைமை நிறுவனம் (Information Security Management System - ISMS)

ICT யினால் ஏற்படும் உடல்கேடுகள்

1. தசை வன்கூட்டுப் பிரச்சினை

2. மீள்வரும் தகைப்புக் காயம்(Repetitive Stress Injury-RSI)

3. மணிக்கட்டு சுரங்கச் சகசம்(Carpel Tunnel Syndrome - CTS)

4. கணினிப் பார்வைச் சகசம்(Computer Vision Syndrome - CVS): தொடர்ச்சியாக 6 அல்லது 7 மணித்தியாலங்கள் கணினியில் தொடர்ந்து பணியாற்றுவதினால் கண்ணில் ஏற்படக் கூடிய உறுத்தல் கணினிப் பார்வைச் சகசம் எனப்படும்.

5. தலைவலி(Headache)

6. தகைப்பு(Stress)



 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu