பாய்ச்சல் கோடு Grade 7

Flow chart part 2 

 Click to read flow chart part 1

பாய்ச்சல் கோட்டு  படம் அடிப்படியில்  3 control structure ஐ அதாவது 3 கடடமைப்புக்களை கொண்டது. முதலாவது தொடரி முறை, இரண்டாவது தெரிவு, முறை மூன்றாவது மீள்செயல் முறை ஆகும். இப்பொழுது ஒவ்வொரு கட்டமைப்பை பற்றியும் விரிவாக பார்ப்போம். 

ஒரு நெறிமுறையில் உள்ள அறிவுறுத்தல்களை ஒழுங்கு முறையாக மேலேயிருந்து கீழே நடைமுறைப்படுத்தல் தொடரி முறை  (Sequence ) எனப்படும் . இதனை ஒரு பாய்ச்சற் கோட்டுப் படத்தில் காட்டும் விதம் பற்றிப் பார்ப்போம். 



உதாரணமாக ஒரு செவ்வகத்தின் பரப்பளவை கணிப்பது பற்றி  பாய்ச்சல் கோட்டு  படத்தில் பார்ப்போம். 

எந்த  ஒரு  பாய்ச்சல் கோட்டு  படத்தையும் வரையும் போது முதலில் தொடக்க குறியீடு வரைய வேண்டும்.  அடுத்ததாக உள்ளீடு அதாவது input. இங்கே உள்ளீடு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் ஆகும். அடுத்ததாக செயன்முறை. இங்கே செயன்முறை பரப்பளவு=நீளம் தர அகலம் ஆகும். அடுத்ததாக செயன்முறை ஆக்கப்பட்ட தரவு வெளியீடாக கிடைக்கும். இறுதியாக பாய்ச்சல் கோட்டு படம் முடிக்க பட வேண்டும்.

 இதனை நீங்கள் நன்கு விளங்கிக்கொள்ள ஒவ்வொரு குறியீடு பற்றியும் சரியாக அறிந்திருக்க வேண்டும்.  உங்களுக்கு  பாய்ச்சல் கோட்டு  படத்தின்  குறியீடு பற்றி அறிந்து கொள்ள வேண்டுமாயின் பாய்ச்சல் கோடு   பகுதி 1 இனை பார்க்கவும்.  

Read flowchart part 3 






கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu