Flow chart part 3
click to read flow chart part 2
தெரிவு முறை
அடுத்ததாக தெரிவு முறை பற்றி பார்ப்போம். தரப்பட்ட நிபந்தனைக்கேற்பச் செயற் படுத்த வேண்டிய படிமுறை பற்றி இங்கு தீர்மானிக்கப்படும் . ஒரு தெரிவின் நிபந்தனையைப் பரீட்சித்து அது உண்மையாக அல்லது பொய்யாக இருப்பதற்கேற்பப் பாய்ச்சல் திசையைத் தெரிந்தெடுக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு மின்குமிழ் தொழிற்படும் ஒரு சந்தர்ப்பத்தைக் கருதுவோம் . ஆளியிடும் போது மின்வலு இருப்பின் மின்குமிழ் தொழிற்படும். மின்வலு இல்லாவிட்டால் மின்குமிழ் தொழிற்படமாட்டாது.
இதனை இப்பொழுது பாய்ச்சல் கோட்டு படத்தில் பார்ப்போம்.
முதலில் தொடக்கம் வரையப்பட வேண்டும் அட்டுத்ததாக உள்ளீடு, இங்கு உள்ளீடு ஆளியிடுதல். ஆளியிட்ட பின்பு மின்வலு இருக்கிறதா என பார்க்க வேண்டும். ஆகவே இங்கு இரண்டு விதமான சாத்தியக்கூறு உண்டு. ஆளியிடும் போது மின்வலு இருப்பின் மின்குமிழ் தொழிற்படும். மின்வலு இல்லாவிட்டால் மின்குமிழ் தொழிற்படாது. ஆகவே இரண்டு சந்தர்ப்பத்துக்கும் எதாவது ஒரு தெரிவை செய்ய பாய்ச்சல் கோட்டு படத்தில் தெரிவு முறை வரையப்பட வேண்டும். இங்கே தெரிவு முறையில் மின்வலு இருந்தால் ஆளியிடும் போது வெளியீடாக மின்குமிழ் ஓளிரும். மின்வலு இல்லாவிட்டால் வெளியீடாக மின்குமிழ் தொழிற்படாது. கடைசியாக முடிவு வரையப்படும்.
என அனைத்து வகையான
செய்திகளையும் தமிழில் பெற சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 கருத்துகள்