கணினிகளின் முக்கியத்துவம் Grade 6 unit 1

 கணினிகளின் முக்கியத்துவம் 

கணினியின் அடிப்படை செயல்பாடுகள் தரவை உள்ளிட்டு அவற்றைசெயலாக்குகின்றன. மற்றும் பெறப்பட்ட தரவுகளை தகவல்களாகமாற்றுதல். (உள்ளீடு, செயல்முறை, வெளியீடு)

கணினியின் சிறப்பியல்புகள்

  •   கதியும் திறனும்  செம்மை 
  •   நம்பகத்தன்மை
  • தேக்ககக் கொள்திறன் 
  •  துண்மதி 

உட்பொதிக்கப்பட்ட கணினிகளுடன் சாதனங்கள்

துணிச் சலவைப் பொறி , நவீன தொலைக்காட்சிகள் , சூட்டிகைசெல்லிடத் தொலைபேசிகள் ,நவீன மோட்டர் வாகனங்கள் ஆகியகணினிச்செய்நிரல்களுக்கேற்பத்தொழிற்படுகின்றன.இவற்றினுள்ளே இருக்கும் கணினிச் செய்நிரல்கள் உட்பொதிந்த ( Embedded) கணினித் தொகுதிகள் எனப்படும்.

கணினியின் கூறுகளை இனம் காண்போம்…                  

computer parts grade 6 tamil medium
கணினி பல பகுதிகளைக் கொண்டுள்ளது . அப்பகுதிகள் பயன்படுத்தப் படும் தொழிலின் இயல்புக்கேற்பக் கூறுகளாக ( Components ) வகைப் படுத்தப்படலாம்.

·    உள்ளீட்டுச் சாதனங்கள் ( Input devices )

·    வருவிளைவுச் சாதனங்கள் ( Output devices)

·    மைய முறைவழி அலகு ( Central Processing Unit )

·    முதன்மை நினைவகம் ( Main memory )

·    தேக்ககச் சாதனங்கள் ( Storage devices )  

·    தொடர்பாடற் சாதனங்கள் (Communication devices )

 உள்ளீட்டுச் சாதனங்கள் ( Input devices )

 

input devices ict grade 6 unite 1
உள்ளீட்டுச் சாதனங்கள் கணினிக்குத் தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் உள்ளீட்டுச் சாதனங்கள் எனப்படும் .

வருவிளைவுச் சாதனங்கள் ( Output devices )

out put devices ict grade 6 unite 1

 

வருவிளைவுச் சாதனங்கள் கணினியில் முறைவழிப்படுத்திய தரவுகளை வெளியே தகவல்களாகப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் வருவிளைவுச் சாதனங்கள் எனப்படும். 

மைய முறைவழி அலகு

வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்பத் தரவுகளை முறைவழிப் படுத்தும் செயன்முறையும் மைய முறைவழி அலகின் மூலம் மேற் கொள்ளப்படும் .மைய முறைவழி அலகு கணினியின் முறைமை அலகில் தாய்ப்பலகையில் பொருத்தப்பட்டுள்ளது . அதனை வெளியேயிருந்து பார்க்க முடியாது . 

முதன்மை நினைவகம்

கணினி தொழிற்படும்போது தரவுகள் , அறிவுறுத் தல்கள் , தகவல்கள் ஆகியவற்றைத் தற்காலிகமாக சேமித்து வைத்துக் கொள்ளும் சாதனம் கணினியின் முதன்மை நினைவகம் எனப்படும் . இது தற் போக்குப் பெறுவழி நினைவகம் எனவும் அழைக்கப்படும் .

 தேக்ககச் சாதனங்கள்

மீண்டும் பயன்படுத்துவதற்காகத் தரவுகள், அறிவுறுத்தல்கள் , தகவல்கள் ஆகியவற்றைத் தேக்கி வைக்கப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் தேக்ககம் சாதனங்கள் எனப்படும்.

 தொடர்பாடற் சாதனங்கள்

கணினியில் முறைவழிப்படுத்திய தகவல்களைப் பரிமாறுவதற்குப் பயன் படுத்தப்படும் சாதனங்கள் தொடர்பாடற் சாதனங்கள் எனப்படும்.

 கல்வி,  தொழில்நுட்பம்

என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu