பணிச்செயல் முறைமையும் கோப்புக்களை கையாளாலும் Grade 6 unite 3

பணிசெயல்முறைமை (operating system) ஒரு மென்பொருள் ஆகும். இது பயனருக்கும் கணினி வன்பொருளுக்கும் (hardware)  இடையில் தொடர்பினை ஏற்படுத்துகிறது. அத்துடன் கணனியில் உள்ள கோப்புக்களையும் (files) ஏனைய மென்பொருட்களையும் (software) கையாளுகின்றது. பணிச்செயல் (OS) முறைமை மூலம் பயனர் தனது பணிகளை செய்வதற்கு(user interface) இடைமுகத்தை பெறுகின்றார். கணணியை தொழிற்படுத்தியவுடன் இந்த இடைமுகம் பணிச்செயல் முறைமையால் வழங்கப்படும்.

pure tamil tech

விண்டோஸ், android, linux, mac OS, போன்றவை பணிசெயல்முறைமைக்கு உதாரணங்களாகும்.   

அடுத்ததாக கோப்புக்கள் (files) பற்றி பார்ப்போம். கோப்புக்கள் பல வடிவங்களில்  சேமித்து வைக்கலாம். ஆவணம் (documet), புகைப்படம் (photo), காணொளி (video), பாடல் (song) போன்றவை கோப்புக்களுக்கு உதாரணமாகும். ஒவ்வொரு கோப்பிற்கும் விசேட குறி (icon), கோப்பு நீட்ச்சி (file extension) உண்டு. கணனியில் கோப்புக்கள் கோப்புறையினுள் காணப்படும்.

உதாரணமாக ஒரு ஆவணத்தை எடுத்துக்கொண்டால். 

ict tamil notes


  • கோப்புகளைக் கையாளல் பணிசெயல் முறைமையின் பிரதான தொழில்களில் ஒன்றாகும். 
  • பணிசெயல் முறைமையின் மூலம் கோப்பினை உருவாக்கல், கோப்பினைத் திறந்து பதிப்பித்தல், மூடுதல் போன்ற தொழில் களையும் சாளரத்தை பெரிதாக்கல், சிறிதாக்கல், மறு அள வாக்கல் ஆகியவற்றையும் செய்யலாம்.
  • கோப்பு என்பது தரவுச் சேகரிப்பாக இருக்கும் அதேவேளை சில கோப்புகளின் சேகரிப்பு கோப்புறையாகும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu