மின்னஞ்சல் முகவரியைக் கொண்ட இருவர்
அல்லது பலருக்கிடையில் இலத்திரனியல் முறையில் நடைபெறும் கடிதப் பரிமாற்றமே
மின்னஞ்சலாகும்.
இதனூடாக எழுத்துக்கள் , பாடல்கள் , காணொளிகள் , ஆவணங்கள்
போன்றவற்றை அனுப்பலாம். மின்னஞ்சல் கணக்கினை ஆரம்பிக்க பொருத்தமான சேவை வழங்கல்
தளத்தை தெரிவுசெய்து கொள்ள வேண்டும் . பொதுவாக இவ்வாறான இணையத் தளங்களினால் இலவச
மின்னஞ்சல் சேவை வழங்கப்படுகிறது.
உதாரணமாக gmail, yahoo mail, outlook போன்றவைற்றை குறிப்பிடலாம்.
இப்பொழுது மின்னஞ்சல் முகவரியின் கூறுகள் பற்றி பார்ப்போம்.
உதாரணமாக ajanthan@gmail.comஎன்பது ஒரு ஈமெயில் முகவரி. இங்கு ajanthan என்பதுபயனர் அதாவது user இன் பெயர். அடுத்ததாக இருப்பது @. இது பயனரின்
பெயரினை ஏனைய பகுதிகளுடன் இணைக்க பயன்படும். இறுதியாகஇருப்பது ஆள்களப் பெயர் அதாவது domain ஆகும்.
அடுத்து மின்னஞ்சலை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டிய கூறுகளை பார்ப்போம்.
To மின்னஞ்சலை யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருடைய முகவரியை உள்ளீடு செய்ய பயன்படும்.
cc இன் விரிவாக்கம் carbon copy, இது ஒரு மின்னஞ்சலின் பிரதியை பலருக்கு அனுப்ப பயன்படும். ஆகவே இந்த CC பகுதியில் யாருக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமோ அவர்கள் எல்லோருடைய மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிட்டு ஒரே தடவையில் எல்லோருக்கும் அனுப்ப முடியும்.
Blind carbon copy இதனையே Bcc என சொல்கிறோம். இந்த பகுதியில் ஒருவருடைய. மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிட்டு அனுப்பினால் To, cc ல் குறிப்பிடட நபர்களுக்கு bcc இல் உள்ளவருக்கு மின்னஞ்சல் அனுப்புவது தெரியாது. ஆனால் bcc ல் இருப்பவருக்கு To, cc இல் இருப்பவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவது தெரியும்.
அடுத்து subject, இது மின்னஞ்சலுக்குரிய தலைப்பு இட பயன்படும்.
ஜங்க் இல் தேவையில்லாத மின்னஞ்சல் காணப்படும்.
அட்டாச் மூலம் பாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் ஆகியவற்றை மின்னஞ்சலில் இணைக்கலாம்.
கெண்டக்ஸ்ல் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகளை சேமித்து வைக்க முடியும்.
ராஸ் இல் அழிக்கப்பட்ட மின்னஞ்சல் இருக்கும்.
சென்ட் இல் அனுப்பப்பட்ட மின்னஞ்சலும் இன்போக்ஸ் இல் உங்களுக்கு வந்த மின்னஞ்சலும் இருக்கும்.
கம்போஸ் அல்லது நியூ மூலம் புதிய மின்னஞ்சலை உருவாக்கலாம். உருவாக்கிய மின்னஞ்சலை அனுப்ப சென்ட் பட்டன் பயன்படும்.
0 கருத்துகள்